Timeline extension till tomorrow to allow unauthorized housing plots; Namakkal Collector

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தமிழ்நாடு அரசால் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அமையும் தனிப்பட்ட மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க ஏற்கனவே நவ.3ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை விடுமுறை காலமாக இருந்ததால் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்காக கால நீட்டிப்பு வழங்கக் கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் தமிழக அரசின் உத்தரவின்பேரில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்காக இன்டர்நெட் மூலமாக பதிவு செய்ய வருகிற 16ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே. தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கால வரைக்குள், நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 20.10.2018 க்கு முன்பு கிரயம் பெற்றுள்ள அனுமதியற்ற மனைகளின் உரிமையாளர்கள் இன்டர்நெட் முகவரியில் ரு.500 ஐ செலுத்தி, பதிவு செய்த ரசீதினை ஆவணங்களுடன் இணைத்து, சம்மந்தப்பட்ட நகராட்சிகளிலோ, பேருராட்சிகளிலோ, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலோ விண்ணப்பித்து மனையை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் மனையின் கிரையப் பத்திர நகல், நடப்பு வரையிலான வில்லங்கச் சான்று நகல், பட்டா நகல் நில அளவை வரைபட நகல், மனை அமையும் மனைப்பிரிவின் வரைபடம் – 5 நகல்கள் மற்றும் அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

எனவே, நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளின் உரிமையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!