Those who wish to get a vehicle on a subsidized price can apply till 31st

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு நிலையில் பணிபுரிந்து வரும் மகளிருக்கு 50 சதவீத (அதிகபட்ச மானியம் ரூ.25,000) மானியம் மற்றும் கடன் தொகையில் இருசக்கர மோட்டார் வாகனம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் மகளிருக்கு 2018-2019 ஆம் ஆண்டில் அம்மா இரு சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 18ம் தேதி வரை வரவேற்கப்பட்டன.

தற்போது, தமிழக அரசு மானிய விலையிலான இருசக்கர மோட்டார் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க வருகிற 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான வேலைக்கு செல்லும் மகளிரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், டவுன் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ வருகிற 31ம் தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம்.

இது சம்மந்தமாக கூடுதல் விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், டவுன் பஞ்சாயத்து அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் நாமக்கல் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தை 04286-281131 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!