The Tamil Nadu Teacher Coalition requested the Tamil Nadu Government to abandon the decision to shut down 1500 government schools

நாமக்கல் : தமிழகத்தில் 1500 அரசு பள்ளிகளை மூடும் மூடும் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பூபதி, பொருளாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் அண்ணாமலை, மாநிலப் பொருளாளர் சந்திரசேகர், முன்னாள் துணைத்தலைவர் ரங்கராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

தமிழகத்தில் காமராஜர் காலம் முதல் இன்று வரை தமிழக அரசு ஏராளமான புதிய பள்ளிகளைத் திறந்ததால் மாநிலத்தில் கல்வி கற்போரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இந்த நிலையில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு விரைவில் தமிழகத்தில் 10 குழந்தைகளுக்கும் குறைவாக படிக்கும் சுமார் 1500 பள்ளிகளை மூட முடிவெடுத்துள்ளது.

பள்ளிகளை மூடினால் அப்பள்ளி மாணவர்கள் கல்வி கற்க அதிக தொலைவு செல்லவேண்டியிருக்கும், இதனால் கல்வி பாதிக்கப்படுவதுடன் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவார்கள் எனவே தமிழக அரசு பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும்.

தமிழகத்தில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இந்த ஆண்டு துவக்கத்தில் கல்வியாளர்களின் கூட்டத்தைக்கூட்டி அவர்களின் கருத்தைக் கேட்டு 12 ஆண்டுகளுக்குப்பிறகு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தும், பிளஸ் 1 வகுப்பிற்கு பொதுத்தேர்வை அறிவித்து 11 மற்றும் 12ம் வகுப்பின் மதிப்பெண்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு உயர்கல்விக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தார். இதை அனைவரும் வரவேற்றனர்.

இந்த நிலையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் ஆனால் அந்த மதிப்பெண் உயர்கல்விக்கு எடுத்துக்கொள்ளப்படாது, பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் தன்னிச்சையாக அறிவித்துள்ளது கண்டனத்திற்குரிது.

இது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமையும், மீண்டும் அவர்கள் பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 12 பாடத்தை நடத்துவார்கள். நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பார்கள். இதனால் அரசு பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே மீண்டும் கல்வியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இதற்கு சரியான தீர்வு காண கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது ஆசிரியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல் செய்வதாக அறிவித்தார். ஆனால் தற்போதைய தமிழக அரசு அதை செய்யவில்லை. தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் புறக்கனிக்கப்படுவதுடன், தமிழக முதல்வரும், அமைச்சர்களும் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசிவருகின்றனர்.

எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் அனைத்து ஆசிரியர்கள் இயக்கங்களையும் ஒன்றினைத்து பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரளான ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!