The swine flu: In Namakkal district, there are 3 people affected by the mother and the daughter: preventive action intensity

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அத்தனுாரில் தாய்,மகள் உள்பட 3 பேருக்கு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மூவரும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என,நாமக்கல் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் எல்.உஷா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 9 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் டெங்கு மற்றும் பன்றிக் காயச்சல் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொசு வலையுடன் கூடிய தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் குழந்தைகளுக்கு கொசுவலையுடன் கூடிய பத்து படுக்கை,பெரியவர்களுக்கு 20 படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளில் உள்ள தனி வார்டுகளில் கொசு வலையுடன் கூடிய பத்து படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல்,தனியார் மருத்துவமனைகளிலும் தனி வார்டு அமைக்க உத்திரவிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது. மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 34 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளனர்.இதில், குழந்தைகள், பெரியவர்கள் அடங்குவர். இம்மாதம் சேந்தமங்கலம்,திருச்சி மாவட்டம் காட்டுப்புத்துாரில் இருந்து 2 பேர் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு வந்து உடல்நலம் தேறி சென்றனர்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு தேவையான மருந்து,மாத்திரைகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன. தவிர, தனி வார்டு மற்றும் மருத்துவமனையிலும் நில வேம்பு கசாயம் வைக்கப்பட்டுள்ளது.ராசிபுரம் அருகே அத்தனுாரில் முருகன் என்பவரது மனைவி வினோதினி (35),அவரது மகள் சம்ரிதா (10) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (60)ஆகியோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவரும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் பாதிப்பிற்குள்ளான குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் மருத்துவக் குழு மூலம் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காய்ச்சல் பாதிப்பு காரணமாக புறநோயாளியாக சிகிச்சைக்கு வருவோருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அதை உறுதி செய்யும் எலிசா பரிசோதனை வசதி உள்ளது. மருத்துவமனையில் புதிதாக எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்,என்றார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!