The staff and students thanked the Perambalur MLA who brought the 11 removed subjects

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசுக் கல்லூரியில் நீக்கப்பட்ட 11 பாடப்பிரிவுகளை கொண்டு வந்த பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனுக்கு கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள் இன்று சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

பெரம்பலூரில், கடந்த 2006ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தொடங்கப்பட்டது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி அரசு கலைக்கல்லூரியாக தரம் உயர்த்துப்பட்டு அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது.

தற்போது இக்கல்லூரி அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் 11 பாடப்பிரிவுகளை நீக்கியது. இதை கண்டித்து மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பலர் சாலைமறியல் போராட்டம் உள்பட பல போராட்டங்கள் முன்னெடுத்தனர்.

இந்நிலையில பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செலவனை சந்தித்து மாணவ அமைப்பினர் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப பல்கலைக்கழகத்தால் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் கடந்த வாரத்திற்கு முன்பு மனு கொடுத்து இருந்தனர். அதில் கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணிப்புரிந்து வரும் தங்களை பணி நியமனம் செய்ய வேண்டும், நீக்கப்பட்ட பாடப்பிரிவுகளை கொண்டு வந்து மீண்டும் பின்தங்கிய இப்பகுதி மாணவர்கள் பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை விடுத்து இருந்தனர்.

கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் பேசி, மீண்டும் நீக்கப்பட்ட பாடப்பிரிவுகள் பெரம்பலூர் – குரும்பலூர் அரசுக்கல்லூரியில் மீண்டும் கொண்டு வந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று காலை பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனை சந்தித்த கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் ஒன்று திரண்டு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!