The sit-in demanding VAOs Ramanathapuram taluk office

ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 தாலுகா அலுவலக வளாகங்களில் வி.ஏ.ஓ.,க்கள் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு இணையதள சேவை செய்ததற்கான சேவை கட்டணத்தை அரசு வழங்காததை கண்டித்து இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் வி.ஏ.ஓ.க்கள் மக்களின் பல்வேறு தேவைகளுக்கு சான்றிதழ் உள்ளிட்டவைகளுக்கு இணைய தள சேவையை பயன்படுத்துகின்றனர். இதற்கான கட்டண பாக்கி பல மாதங்களாக அரசு வழங்காமல் உள்ளது. இந்நிலையில் அரசு அலுவலர் பணிகளை வி.ஏ.ஓ.க்கள் தங்களது சொந்த செலவில் செய்ய வேண்டிய நிலை உருவாகியது.

இதற்கு உரிய தொகை வழங்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் உரிய பலன் இல்லை. இந்நிலையில் தமிழக அளவில் வி.ஏ.ஓ.,க்கள் மாவட்டம் வாரியாக தாலுகா அலுவலகங்களில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

இதன்படி இன்று மாலை 6.30 மணிக்கு ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் சங்கத்தினர் திரண்டனர். நிர்வாகி செந்தில்குமார் தலைமயில் 20க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் அரசுக்கு எதிராக கோஷமிட்டமாறு தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கோரி இரவில் மொபைல் போன் முலம் விளக்கு ஏந்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!