The siege of the railway station in Thanjavur was condemned by the Central Government which had diluted the Amendment Act.

தஞ்சாவூர் வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போக செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய உடனடியாக அவசர சட்டம் பிரகடனம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமையில் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்திட உடனடியாக அவசர சட்டம் மத்திய அரசு நிறைவேற்றிடவும் அரசியல் சாசனத்தில் 9வது அட்டவணையில் மத்திய அரசு உடன் இணைத்திடவும் உரிமைகளுக்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பா.ஜ.க. அரசுகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடவும் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பத்தினர்களுக்கு தலா 1கோடி இழப்பீடு வழங்கிடவும் முற்றுகைப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சொக்கா.ரவி. கோட்டை அரசமாணிக்கம் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அமர்சிங். தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர்அரங்க.குணசேகரன். ஆதி தமிழர் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, விடுதலைத் தமிழ்ப் புலிகள், ஆதித் தமிழர் பேரவை, தமிழக ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகம், தமிழ் புலிகள் கட்சி அம்பேத்கார் மக்கள் இயக்கம், பெரியார் மையம் டாக்டர் அம்பேத்கார் கல்வி அறக்கட்டளை அமைப்புகளைச் சார்ந்த நூற்றுக் கணக்கானோர் முற்றுகையில் பங்கேற்று கைதாயினர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!