The SFI rally in Perambalur is demanding a ban on School Fees and protection of government schools

#பெரம்பலூர்: தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும், அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்காமல் பாதுகாத்திட வேண்டும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகை 14ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்,

மருத்துவபடிப்பு கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை 1.500 கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக நேற்றிரவு பெரம்பலூர் வந்து சேர்ந்தவர்கள் இன்று காலை 10 மணியளவில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் பேரணியை துவங்கினர்.

மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அருணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார். பாலக்கரை, கடைவீதி, வழியாக பழையபேருந்து நிலையம் சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்த, பின்னர் புதிய பேருந்து நிலையம் சென்று கோரிக்கைகளை விளக்கி பிரச்சார உரையாற்றினர்.

மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை ஒன்றிய செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைசெயலாளர் எஸ்.அகஸ்டின், விதொ.ச மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், கட்டுமான தொழிலாளர் சங்கம் ஈஸ்வரன், மாதர் சங்கம் எ.கலையரசி, மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சரவணன், அன்பரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!