The Rs. 11.50 lakh robbery in Perambalur ! Police investigation

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பணத்தை கொண்டுவரும் வழியில் காணமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி அருகே இனாம் குளத்தூரில் இன்று நடைபெற உள்ள இஸ்லாமியார் மாநாட்டையொட்டி கும்பகோணம் கோட்டத்திலிருந்து இயக்கப்பட்ட 70 பேருந்துகளுக்கான 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை ஒரு சூட்கேஸ்சில் வைத்து சென்னையிலிருந்து அரசுப்பேருந்தில் பெரம்பலூருக்கு, பெரம்பலூர் பணிமனை மேலாளர் செந்தில்குமார் (வயது 52) மற்றும் பணிமனை ஊழியர்கள் சிவக்குமார், ரகுபதி, ஆனந்தக்குமார், மணிமுருகன் ஆகியோர் பெரம்பலூர் வழியாக திருச்சிக்கு செல்லும் அரசு சொகுசு பேருந்தில் எடுத்துக் கொண்டு வந்தனர்.

நேற்றிரவு 2.30 மணிக்கு சென்னையில் புறப்பட்ட பேருந்து பெரம்பலூருக்கு இன்று காலை 8.10 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது. அப்போது பணப்பெட்டி காணாத திடுக்கிட்ட ஊழியர்கள் பேருந்தில் தேடிப்பார்த்தனர். கிடைக்காததால், இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், டி.எஸ்.பி ரவீந்திரனும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும், பணத்தை தொலைத்தாக கூறும் பணியாளர்கள் ஐந்து பேரையும் போலீசார் அழைத்து சென்று ரூ.11.50 காணமல் போனதா, அல்லது பயணி எவரேனும் எடுத்து சென்று விட்டனரா, திட்டமிட்டு ஏதாவது சதி செய்யப்பட்டுள்ளதா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றர்.

இச்சம்பவம் போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!