The Paavai festival in Siruvachur near Perambalur: song competitions: 130 participants

பெரம்பலூர் : சிறுவாச்சூரில் நடைபெற்ற பாவைவிழா பேச்சுப்போட்டிகளில் 130 மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர்.

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் மார்கழி மாதத்தை ஒட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவிக்கும் பாவை விழா கோவில் மதுரகாளியம்மன் கோவில் திருமணமண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு இந்துசமயஅறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதில் 1-5, 6-8, 9-10 ஆகிய வகுப்புகளில் 3 பிரிவு இருபாலாருக்கும் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பெரம்பலூர், செட்டிகுளம், சிறுவாச்சூர் உள்ளிட்ட அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளின் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆய்வாளர்கள் ஸ்ரீதேவி, கண்ணகி சிறுவாச்சூர் மதுரகாளிஅம்மன் கோவில் நிர்வாக அதிகாரி பாரதிராஜா, செட்டிகுளம் தண்டாயுதபாணி மற்றும் ஏகாம்பரேசுவரர் கோவில்களின் நிர்வாக அதிகாரி யுவராஜ், சு.ஆடுதுறை குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரி ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு உதவி ஆணையர் பரிசுகளை வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை அறநிலையத்துறையை சேர்ந்த திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!