The owners should inform the relevant details to calculate the industrial progress: the Namakkal collector

நாமக்கல் மாவட்டத்தில் தொழில்துறை முன்னேற்றத்தை கணக்கிட தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் முழுமையான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இந்திய தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் தொழில் துறையின் முன்னேற்றங்கள் குறித்து மத்திய அரசின் புள்ளியியல் துறையின் மூலமாக தகவல்களை சேகரித்து வருகிறது. இந்த தகவல் அடிப்படையில், ஒரு பகுதியின் தொழில் வளர்ச்சி, அதற்கான அரசின் திட்டங்கள், உதவிகள், தொழில் முனைவோருக்கு மானியங்கள் வழங்குவது குறித்து கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இவற்றிற்கு தேவையான மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யவும், உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப் படுத்தவும் மற்றும் தேவையான தொழிலாளர்களுக்கு திறன் மேலாண்மை பயிற்சி வழங்கவும் புள்ளி விபரங்கள் சேரிக்கப்படுகிறது.

இந்த ஆய்வில் சில நிறுவனங்கள் விவரங்களை தருவதில்லை. அனைத்து நிறுவனங்களும் முழுமையான அளவில் புள்ளி விவரங்கள் அளித்தால் தான், தொழில் துறை சார்ந்த சரியான கொள்கை முடிவுகளை எடுக்க முடியும்.

‘புள்ளி விவரங்கள் சேகரித்தல் சட்டம் 2008” இன் படி இந்த ஆய்வில் சேகாரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். எனவே நாமக்கல் மாவட்டத்தில் 2015 -16ம் ஆண்டு நடந்து முடிந்த ஆய்வில் ஒத்துழைக்காத 15 நிறுவனங்கள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் 2016-17ம் ஆண்டிற்குரிய 117 நிறுவனங்களில், இந்த ஆய்வின் கீழ் விவரங்களை புள்ளியியல் துறை அலுவலர்களுக்கு வழங்க சம்மந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!