The Nilavembu Kasayam camp in the Ramanathapuram district : Minister Manikantan started

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்வதில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடத்தி அமைச்சர் நேரில் சென்று தொடங்கி வைத்து வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்தை தகவல் தொழி்ல்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் முடுக்கி விட்டுள்ளார். அந்தவகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், பேருராட்சிகளிலும், நகராட்சிகளிலும் துாய்மைப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதவிர டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஊர்வலங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்கள் துாய்மைப்பணிகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொகுதியில் இருக்கும்போதெல்லாம் தொடர்ந்து தெருதெருவாக சென்று டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் குப்பைகள் சேராத வகையில் துாய்மைப்பணியை சுகாதார அலுவலர்களும், நகராட்சி அலுவலர்களும் தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தி வருகிறார். மக்களையும் சந்தித்து சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்து வருகிறார்.

ராமநாதபுரம் வெளிப்பட்டணம் நகர்நலமையத்தில் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து நேரில் சென்று அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆய்வு செய்தார். பின் நகர்நலமையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமை துவங்கி வைத்து மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். மக்களிடம் சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்திருக்கவும், டெங்கு பாதிப்பை முற்றிலும் ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதையும் எடுத்துரைத்தார். டெங்கு காய்ச்சல் முலமான பாதிப்பு, அதற்கு காரணமான கொசுக்கள் மற்றும் லார்வாக்கள் அழித்தல், டெங்கு மற்றும் இதர வைரஸ் முலமாக காய்ச்சல் ஏற்பட்டால் எடுத்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் மக்களிடம் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத்தலைவரும் ராம்கோ தலைவருமான முருகேசன், தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) நடராஜன், அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் ரத்தினம், முன்னாள் கவுன்சிலர்கள் ஆரிப்ராஜா, வாசுகி உட்பட பலர் உடன் வந்தனர்.

– சிவசங்கரன், ராமநாதபுரம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!