The legacy of stone-cutting workers in the quarry to rebuild and rectify: Parivanthar confirmed
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில், மதசார்பற்ற கூட்டணியில் போட்டியிடும், பாரிவேந்தர்,  ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதடி, விஜயபோபாலபுரம், நாரணமங்கலம், திருவளக்குறிச்சி, இரூர், கூத்தனூர், நாட்டார்மங்கலம், மாவிலிங்கை, தொட்டியப்பட்டி, தேனூர், நத்தக்காடு, கண்ணப்பாடி, து.களத்தூர், எலந்தப்பட்டி, அடைக்கம்பட்டி, சிறுவயலூர், குரூர், கிராமங்களில் கூட்டணி கட்சியினருடன் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
 
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கல் உடைக்கும் பணியில் பரம்பரை பரம்பரையாக ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்  குலத் தொழிலை தொடர விடாமல், குவாரிகளுக்க அரசு குத்தகைக்கு விட்டுள்ளது.  அதனால் பெரும்பாலான கல்உடைக்கும்  தொழிலாளர்கள் வேலையிழந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். சுகந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் அவர்கள் வாழ்வு சிறக்கவில்லை. அவர்களுக்கு மீண்டும் குவாரிகளில் கட்டணமின்றி கைத்தொழில் செய்து கல்உடைத்து அவர்கள் அன்றாட பிழைப்பு தங்கு தடையின்றி நடத்த நடவடிக்கை எடுத்து மீண்டும் அவர்களின் மக்களின் உரிமையை வெற்றி பெற்ற பின்னர் றைவேற்றப்படும்.
 
 
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு தற்போதைய ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள பெரம்பலூர் மருத்துவக்கல்லூரியை கொண்டு வருவேன். முன்னாள் மத்திய அமைச்சர் ஆராசா எம்.ஆர்.எப். தொழிற்சாலையை கொண்டு வந்தது போல் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன்.
 
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய மாநில அரசுகளிடம் நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்துவேன்.
 
50ஆண்டு கால கனவு திட்டமான *அரியலூர்; -பெரம்பலூர்-துறையூர்- நாமக்கல் ரயில் பாதை திட்டத்தை எம்.பி. ஆன பிறகு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். 
 
கடந்த முறை நீங்கள் தேர்வூ செய்த தொகுதிக்கு வராத ஒரு எம்.பி.யாக இருக்கமாட்டேன் சிறந்த எம்.பி.யாக இருப்பேன். 
 
குடிநீர் தட்டுபாட்டை போக்குவேன், காவிரி கூட்டுகுடி நீர் திட்டத்தை விரிவு படுத்தி ததண்ணீரை உங்களது ஊர்க்கு கொண்டு வருவேன் உங்களது ஊர் தேவையை வெற்றி பெற்று தீர்த்து வைப்பேன் மறவாதீர் உதயசூரியன்….
 
ஆலத்தூரில் உள்ள தேருக்கு இரும்பு சக்கரம் கேட்டு பொது மக்கள்  கோரிக்கையை ஏற்று தேருக்கு இரும்பு சக்கரம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
 
வெற்றி பெற்ற பிறகு உங்கள் ஊர்தேவையை டெல்லி இருந்து பெற்று தருவேன். 
 
பெரம்பலூரை தவிர இந்தியாவில்லஅனைத்து ஊர்களிலும் உள்ளது. உங்கள் ஊருக்கான ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது அதனை நிறை வேற்றுவேன் வெற்றி பெற்ற பிறகு அடிக்கடி ஊங்கள் ஊருக்கு வந்து உங்களை சந்தித்து உங்களது தேவையை நிறைவேற்றி தருவேன்
 
இளைஞர்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம், விவசாயிகளுக்கு குளிர்பதன கிடங்கு வசதி, கனவு திட்டமான ரயில் பாதை திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
 
இரூரில் செயல்படும் நடுநிலைப் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக செயல்படும்.  மக்கள் பிரச்சினைகளை தீர்க்க எந்த ஒரு பெரிய திட்டமாக இருந்தாலும் அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன்.
 
வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் விவசாய பொருட்கள் தொடர்பான தொழிற்சாலை கொண்ட சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
 
மக்கள் கஷ்டங்களை அறிந்த திமுக நகைகடன் தள்ளுபடி, இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலை வாய்ப்பு என பல நல்ல திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
 
நாட்டார் மங்களம் கிராமத்தின், குடி நீர் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். ஊர் மக்ககளின் கோரிக்கையான சமுக நலக் கூடம் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.  உங்கள் கோரிக்கை எல்லாம் நிறை வேற்றி தந்து நல்ல எம்.பி. என்ற பெயர் எடுப்பேன்
 
மாவிலங்கை
 
உங்களால் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நான் ஒர் முன்னுதாரனமான நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு பின் தங்கிய தொகுதியாக உள்ள பெரம்பலூரை ஒரு முன் மாதிரியான தொகுதியாக மாற்றி காட்டுவேன்.
 
மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றதும் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விவசாயிகள் மாணவர்கள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்த வேந்தர். இப்பகுதியில் கு நீர் பிரச்சினையை தீர்க்க காவிரி கூட்டுகுடி நீர்திட்டம் செயல்படுத்தப்படும்.
 
மத்தியில ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு மாதம் 6 ஆயிரம் வீதம் 72 ஆயிரம் வழங்கங்படும்  திமுக ஆட்சி செய்த காலம் பொற்காலம் எனவும் இதுவரை யார் யாரையோ நாடாளுமன்ற உறூப்பினர்களாக தேர்ந்தெடுத்தீர்கள் உங்களது குறை தீர்க்க வில்லை. இந்தமுறை எனக்கு வாய்ப்பளித்தால் உங்களது பிரச்சினையை தீர்ப்பேன்.
 
நீங்கள் எம்.பியாக தேர்ந்தெடுத்தால் உங்கள் வீட்டு எம்.பியாக இருந்து உங்களது பிரச்சினையை தீர்ப்பேன். வெற்றி பெற்ற பிறகு நானே வந்து ஊர் மக்களிடம் கலந்து பேசி தீர்ப்பேன்.  பொதுமக்கள் தங்களது ஊர் பிரச்சினைக்காக எப்போதும் தொடர்பு கொள்ளலாம்.
 
விவசாய விளைப் பொருட்களை பாதுகாக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு வசதி நான் தனிப்பட்ட முறையில் 6 சட்டமன்ற தொகுதியில் 50 பேர் வீதம் 300 பேருக்கு  உயர் படிப்பும், 300 வேலை வாய்ப்பு வழங்குவோம்.
 
கஜா புயல் பாதித்த மாவட்டங்களை சேர்ந்த மாணவவர்களுக்கு 48 கோடி தள்ளுபடி செய்துள்ளோம். இதுபோல ஊர் மக்கள் பயன்பெற உங்களது தேவைகள் அனைத்தையுநிறைவேற்றுவேன்
 
நான் இத்தனை காலமும் மக்களுக்காகவும் மக்ககள் சேவைக்காகவே இருக்கிறேன். கல்வி, மருத்துவ சேவையில் நான் 50 ஆண்டுகளாக ஈடுபட்டு உள்ளேன்.
 
உங்களது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி உதய சூரியற் சின்னத்தில் வாக்களியுங்கள். எனக்காக வெயிலையும் பொருட்படுத்தாது நிற்கும் உங்களுக்கு நான் நன்றிகடன் பட்டவனாகவும் இருப்பேன். உங்களது வாழ்வின் தரத்தை உயர்த்துவேன். தொகுதியில் மக்கள் வசதிக்காக கூடுதலாக 5 மருத்துவமனைகள் அமைப்பேன்.
 
எம்.பியாக வாய்ப்பு கொடுத்தால் உங்கள் வீட்டில் ஒரூவராக இருப்பேன். என்னை பற்றி அவதூறு கூறும் பிற கட்சியினரின் கருத்துக்ககளை நம்பி ஏமாற வேண்டாம்
மக்கள் என்னை எளிதில் தொடர்பு கொண்டு உங்களது கோரிக்கையை அளிக்கலாம். 
 
பிறருக்கு உதவும் பண்பு தனது பிறப்பிலேயே வந்தது. பிறரை மதிப்பது என் குடும்பத்தில் இருந்து வந்தவன்.  மாணவ வவசதிகளுக்காக கட்டப்பட்ட கல்லூரியை வைத்து என்னை கோடீஸ்வரர் என பொய்யான தகவலை கூறுகிறார். என்னை பார்க்க வந்து பார்க்காமல் திரும்பாதவர் யாரும் இல்லை.
 
ஆளும் கட்சி வேட்பாளரானவர் போட்டியிடும் தொகுதியில் பலரிடம் லஞ்சம் பெற்று பிறருக்கு உதவாதவர். பாசனத்திற்கு செல்லும் கால்வாய் நிலங்களை ஆக்கிரமித்துள்ளார். மக்களை மிரட்டியும் உள்ளார். மக்களிடம் அன்பாய் இருப்பது. பிறரிடம் கோபப்படக்கூட எனக்கு தெரியாது நான் ஆடம்பர வாழ்க்கை வாழாதவன். நான் செலவு செய்யும் பணம் அனைத்தும் நேர்மையாக வரி கட்டிய பணம். என் மீது குறை கூறுபவர்கள் தனது மீதான குறை பார்க்க வேண்டும், என பேசினார். 

Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

:
error: Content is protected !!