The Jactto – Geo strikes are a threat to the Tamil Nadu government. H. Raja

ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்தப் போராட்டம் தமிழக அரசை மிரட்டும் செயலாகும் என பா.ஜ.கட்சி தேசிய செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாடு மாநில நிர்வாகி ஹாரிஹரகோபால், மணிபாரதி தம்பதியின் மணிவிழா நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ. க தேசிய செயலாளர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கஜா புயலால் 8 மாவட்டங்களில் பேரிடர் நடைபெற்றுள்ளது. இரவு பகல் பாராமல் கொட்டுமழை, தண்ணீர் உள்ளிட்டவைகளில் நின்று மின் கம்பங்களை நட்டு அப்பகுதிகளுக்கு மின் இணைப்பை வழங்கிய மின்சார வாரிய ஊழியர்களை நான் மனதாரா பாராட்டுகிறேன். அதே சமயத்தில் புயல் பாதித்துள்ள 8 மாவட்டங்களுக்கு சென்று ஜாக்டோ ஜியோவினர் பொது மக்களுக்கு பணி செய்யவில்லை என்றாலும் பராவாயில்லை ஆனால் டிசம்பர் 4ம் தேதி வேலை நிறுத்தம் அறிவித்திருப்பது தமிழக அரசை மிரட்டும் செயல் ஆகும்.

உங்கள் கோரிக்கைகள் நியாமானது என்றாலும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதற்கான நேரம் இது இல்லை. எனவே அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று கூடுதல் நேரம் ஒதுக்கி புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சென்று பணி செய்ய வேண்டும். திமுக உள்ளிட்ட சில கட்சிகளில் தூண்டுதலால்தான் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று கமல் கூறுவது முறையானது இல்லை என தெரிவித்தார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!