The hunger strike in Namakkal on behalf of the VAOs Provincial Association

கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எம்ஏசிபிஎஸ் சம்பள விகிதத்தை அமல்படுத்த வேண்டும், பயணப்படி அடிப்படை சம்பளத்தில் 5 சதவீதம் வழங்கிட வேண்டும். பேரிடர் மேலாண்மைப் பணிகளை செய்யும் விஏஓக்களுக்கு தனி சம்பளம் வழங்க வேண்டும்.

கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படும் விஏஓக்களுக்கு பணவரன்முறை மற்றும் தகுதிகான் பரும் ஆகியவற்றுக்கான அரசு உத்தரவுகளை உடனடியாக வழங்க வேண்டும்.

மாவட்டம் மற்றும் கோட்ட அளவிலான இடமாறுதல்களை உடனடியாக வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்றது.

சங்க மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியனம் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்றார். முன்னாள் மாவட்டதலைவர்கள் பழனியப்பன், நடராஜன், சிவஞானம் ஆகியோர் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்கள்.

மாநில பிரச்சார செயலாளர் குணசீலன், அமைப்புச் செயலாளர் வேல்முருகன், துணைத்தலைவர் சிங்காரவேலன், துணைச்செயலாளர் சிவப்பிரகாசம், இணைச்செயலாளர் சாந்தகுமார், துணைத்தலைவர் நல்லியப்பன் உள்ளிட்ட திரளான விஏஓக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!