The famous bandit, who had hidden near Preambalur jewelery, Bangalore police rescue!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளை போன சம்பவத்தில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் நேற்று கர்நாடக நீதிமன்றத்தில் ஆஜரானான். பின்னர், கர்நாடக போலீஸ் காவலில் இருந்த அவனை, கஸ்டடியில் எடுத்த போலீஸ் நடத்திய விசாரணையில் கர்நாடக பகுதிகளில் கொள்ளையடித்த நகைகளை திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் பகுதியில் சுமார் 4 கிலோ தங்கநகைகளை மீட்டுக் கொண்டு ரகசியமாக கர்நாடகம் செல்ல இருந்த போலீசார் மற்றும் கொள்ளையன் முருகனை ஐ.ஜி உத்தரவின் பேரில் பெரம்பலூர் போலீசார் சினிமா பாணியில் கிருஷ்ணாபுரம் பகுதியில் துரத்திப் பிடித்தனர்

பின்னர், லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்கும் தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தனிப்படை போலீசார், கர்நாடகா போலீசார் மீட்ட நகைகளை ஆய்வு செய்தனர். அவைகள், திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது தெரிய வந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கர்நாடகம் எடுத்து செல்வதா, தமிழகத்திலேயே வைப்பதா என காவல் துறையினர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!