The dispute with his wife, who committed suicide, as reported by Whatsapp, a former soldier in the rescue!

தற்கொலை செய்துகொள்ளப்போவதாக உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு நாமக்கல் மலைக்கோட்டை மீது ஏறிய முன்னாள் ரானுவ வீரரை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம் எருமபட்டியைச் சேர்ந்தவர் நந்தகோபால் (49). முன்னாள் ரானுவ வீரர். இவர் சம்பவத்தன்று காலை தனது உறவினர்களுக்கு தான் நாமக்கல் மலைக்கோட்டையின் மேல் அமர்ந்திருப்பதாகவும், சற்று நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து அவரது உறவினர்கள் நாமக்கல் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து நாமக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக நாமக்கல் மலைக்கோட்டை மீது ஏறி, அங்கு கோட்டை மதில் சுவரில் அமர்ந்திருந்த நந்தகோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே அழைத்து வந்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

நந்தகோபால் தனது ஊரான எருமப்பட்டியில் வீடு கட்ட திட்டமிட்டு அதற்கு முயற்சி செய்துவந்துள்ளார். ஆனால் அவரது மனைவி வித்யா (43). தனது பெற்றோரின் ஊரான கோவையில் வீடு கட்ட வேண்டும் என கூறினாராம், இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் மன வேதனை அடைந்த நந்தகோபால், நாமக்கல் மலைக்கோட்டையில் மீது ஏறி அமர்ந்துகொண்டு தற்தகொலை செய்து கொள்ளப்போவதாக தனது உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார் என்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!