The day of the timmur manuniti: 91 Rs 16 lakh 83 thousand 110 worth of welfare payments to beneficiaries

mcp-thimmur

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், திம்மூரில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) துரை தலைமையில் மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேளாண்த் துறை, வருவாய்துறை, கால்நடைத்துறை, பால் வளத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகள் மூலமாகவும் மேற்கொள்ளப்படும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறைகளின் அலுவலர்கள் விளக்கமாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) துரை பேசியதாவது:

விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் தங்கள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருக்கும் அனைத்து வகையான பயிர்களையும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்திட வேண்டும். இதன் மூலமாக மழை, வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் காலங்களில், தங்கள் நிலத்தில் பயிரப்பட்டிருக்கும் பயிர்கள் மூலமாக நஷ்டம் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம். மேலும், வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத் துறை மூலமாக தமிழக முதலமைச்சரால் செயல்ப்படுத்த வரும் பல்வேறு நலத்திட்டங்களை தகுதியுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

மேலும் இன்றைய மனுநீதி நிறைவுநாள் நிகழ்ச்சியில் 133 மனுக்கள் பெறப்பட்டு அதில் 64 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 69 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்று பெற்ப்பட்டுள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 33 பயனாளிகளுக்கு ரூ.9,90,000, மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 37 பயனாளிகளுக்கு ரூ.3,08,000- மதிப்பிலான திருமண உதவித் தொகைக்கான காசோலைகளையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் தலா ரூ.12,500 வீதம் 4 பயனாளிகளுக்கு ரூ.50,000ஃ- மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகைக்கான காசோலைகளையும், தோட்டக் கலைத் துறையின் மூலமாக ஒரு நபருக்கு ரூ.43,750 மதிப்பிலான வெங்காய கொட்டகை அமைப்பதற்கான ஆணைகளையும், புதுவாழ்வுத்திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு ரூ.2,90,000 மதிப்பிலான கடனுதவிகளையும், வேளாண்துறை மூலமாக 4 நபர்களுக்கு ரூ.1,360 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 91 பயனாளிகளுக்கு ரூ.16 இலட்சத்து 83 ஆயிரத்து 110 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) துரை வழங்கினார்.

இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) புஷ்பவதி, பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூர்த்தி, ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் சீனிவாசன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஷாஜஹான் உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!