Namakkal_Railway_Station

The completion of railway Oprate in power in Tamil Nadu will be completed in two years: Chief Commissioner

நாமக்கல் : தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளில் ரயில்பாதை மின்மயமாக்கல் பணி நிறைவு பெறும் என, ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் கே.ஏ. மனோகரன் தெரிவித்தார்.

சேலம் – கரூர் வரையிலான அகல ரயில்பாதை மின்மயமாக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ரயில் இயக்குவது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் கே. ஏ. மனோகரன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யூ. சுப்பா ராவ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை சேலம் முதல் நாமக்கல் ரயில் நிலையம் வரை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது நாமக்கல் ரயில் நிலையத்தில் தலைமை ஆணையர் கே.ஏ. மனோகரன், கோட்ட மேலாளர் யூ. சுப்பா ராவ் ஆகியோர் ‘செய்தியாளர்களிடம்’ கூறியதாவது:

சேலம் – கரூர் வரையில் ரயில்பாதை மின்மயமாக்கல் பணி நடந்து முடிந்து விட்டது. இது சரியாக உள்ளதா என, ஆய்வு செய்து ரயில் இயக்குவதற்காக வந்துள்ளோம். ஆய்வு செய்தவரை நன்றாக உள்ளது. இன்றும், நாளையும் ஆய்வுப் பணி நடைபெறும். இதைத்தொடர்ந்து நாளை கரூரில் இருந்து மின் மயமாக்கப்பட்டப் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இந்தச் சோதனை ஓட்டத்திற்குப் பிறகு அதற்கான பரிந்துரையை அளிப்போம். ரயில் இயக்கும் நாள் குறித்து தென்னக ரயில்வே அறிவிக்கும்.

இந்தப் பாதை மின் மயமாக்கப்பட்டு உள்ளதால் ரயில்வே துறைக்கு டீசல் செலவு, அந்நிய செலாவணி குறையும். டீசலில் செல்லும் அதே வேகத்தில்தான் ரயில் இயக்கப்படும். சேலம் – கரூர் அகல ரயில் பாதை மொத்தம் 85 கி.மீ., துாரமுடையது. ரூ. 100 கோடி மதிப்பில் மின்மயமாக்கல் திட்டப்பணி நிறைவு பெற்றுள்ளது. நாமக்கல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகள், எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ரயில் தண்டவாளத்தில் மின்சாரம் செல்வதால் நடந்து செல்லக்கூடாது. ரயில் மீதேறியும் செல்லக்கூடாது. அப்படி செய்தால் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. கடந்த 6 மாதத்திற்கு முன் மைசூர் – பெங்களூர் ரயில்பாதை மின்மயமாக்கல் பணி நடைபெற்றது. திருச்சி – தஞ்சாவூர் வரையிலான பணி நிறைவுபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளில் ரயில்பாதை மின்மயமாக்கல் பணி நிறைவு பெறும். பட்ஜெட்டில் தான் புதிய ரயில் இயக்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

சேலம் கோட்டத்தில் 80 சதவீத ரயில்களில் பயோ டாய்லட் வசதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சதவீத ரயில்களிலும் 8 மாதத்தில் பயோ டாய்லட் வசதி செய்யப்படும், என்றனர். ஆய்வின்போது ரயில்வே துறை அதிகாரிகள் ஏ. விஜூவின், டி.சி. ஜான்சன், ஹரிகுமார், நந்தலால் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!