The Collector of the Namakkal Collector examined the activities of the Horticulture Department

தோட்டக்கலைத்துறை திட்டப்பணிகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் வட்டாரத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் புதுச்சத்திரம் வட்டாரம், ராமநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயி ஜெயக்குமார் நிலத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் வெங்காயம் சாகுபடி செய்துள்ள வயலில் அமைத்திருந்த குறைந்த விலையில் வெங்காயம் சேமிப்புக் கிடங்கினை பார்வையிட்டார்.

மேலும், ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.தொடர்ந்து பட்டணம் கிராமத்தில் விவசாயி பன்னீர்செல்வம் வயலில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர திராட்சை பந்தல் அமைப்பு, முத்துக் காளிப்பட்டி கிராமத்தில் விவசாயி அத்தியப்பன் வயலில் பிரதமரின் சொட்டுநீர்ப் பாசனம் திட்டத்தில் வெங்காயப் பயிரில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குநர் கண்ணன், உதவி இயக்குநர்கள் மஞ்சுளா, மணிமேகலை, தோட்டக்கலை அலுவலர்கள் யோகநாயகி, திவ்யா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கார்த்தி,பெரியசாமி,மணிகண்டன், சுவேதனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!