The Collector are advised by the bankers to provide women and tadco loans in due time

பெரம்பலூர் மாவட்ட அளவிலான அனைத்து வங்கியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கான 2018-19ஆம் ஆண்டு கடன் திட்ட அறிக்கையை மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாவட்ட வங்கி ஆலோசனை குழு முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி பெற்றுக்கொண்டார்.

பெரம்பலூர் மாவட்ட வங்கிகளுக்கான 2018-19ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை பெரம்பலூர் மாவட்ட வங்கிகளுக்கான 2018-19 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமபுற வங்கிகளின் மூலமாக ரிசர்வ் வங்கியின் துறைசார்ந்த முன்னுரிமை கடன்கள் வழிகாட்டுதலின் படியும் மற்றும் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வழிகாட்டுதலின் படி ரூ.3770 கோடி 2018-19 ஆண்டிற்கான கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2017-18ம் வருடத்தில் ரூ.3600 கோடி பெரம்பலூர் மாவட்டத்திற்கு கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு 2018-19ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை மாவட்ட முன்னோடி வங்கியான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டதிற்கான 2018-19ம் ஆண்டிற்கு வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட அறிக்கை ரூ.3770 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டது.

இதில் விவசாய கடன்களுக்காக ரூ.2715 கோடி ரூபாயும், விவசாயம் சார்ந்த தொழிலுக்கு ரூ.339 கோடி ரூபாயும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.716 கோடி ரூபாயும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தை விட ரூ.170 கோடி ரூபாய் வங்கிகளுக்கு கூடுதலாக கடன் இலக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயம் 72 சதவீதமும், விவசாயம் சார்ந்த தொழில் 9 சதவீதமும் இதர முன்னுரிமை கடன்களுக்கு 19 சதவீதம் ஆகும்.

எனவே, வங்கியாளர்கள் அனைவரும் 2018-19ம் ஆண்டிற்கான கடன் திட்டத்தின்படி இலக்கினை அடைய, வங்கியாளர்கள் அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு, மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைய பாடுபட வேண்டும்.

மகளிரின் முன்னேற்றமே ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம். அந்த வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை முன்னேற்றும் வகையில், சுயதொழில் செய்ய கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கும் குழுக்களுக்கு உரிய காலத்திற்குள் வங்கிக்கடன் வழங்க அனைத்து வங்கியாளர்களும் ஆவணம் செய்ய வேண்டும்.

அதேபோல தாட்கோ மூலம் கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் காலதாமதங்கள் ஏதுமின்றி கடனுதவி வழங்க வேண்டும். அவ்வாறு கடனுதவி வழங்குவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மற்றும் தாட்கோ மேலாளர் ஆகியோரை தொடர்புகொண்டு சம்மந்தப்பட் சுயஉதவி குழு அல்லது தனிநபரின் மனுக்கள் மீதுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். அரசு அலுவலர்களும் அவ்வப்போது வங்கி மேலாளர்களை தொடர்புகொண்டு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை கேட்டுப்பெறவேண்டும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர; அவர;கள் தெரிவித்தாவது:

சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையினை எந்தெந்த தேதிகளில், எந்தெந்த பகுதிகளுக்குச் சென்று வழங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்ற விபரங்களை சம்மந்தப்பட்ட பகுதிகளின் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், மாதந்தோறும் 5ஆம் தேதிக்குள் உதவித் தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் இறந்த பயனாளிகள் மற்றும் முகவரி மாற்றம் செய்த பயனாளிகள் இருந்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்க இயலாத சூழல் ஏற்பட்டால் அதன் விபரங்களை உடனடியாக சம்மந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் மு.தேவநாதன், தஞ்சாவூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் பத்மநாபன், முன்னோடி வங்கி மேலாளர், பா.அருள்தாசன், ரிசர்வ் பேங் ஆப் இந்தியா வங்கி மேலாளர் தியாகராஜன் மற்றும் அனைத்து வங்கிகளை சார்ந்த வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!