The Cauvery Management Board is set up to construct 1000 kms. The walking team came to Tanjore.

file

தஞ்சாவூர் தமிழ்நாடு தெய்வீகத் தமிழ் புரட்சி பாசறை அமைப்பின் தலைவர் ஆதி.மதனகோபால் தலைமையில் கடந்த மே-7ந்தேதி பழநியில் இருந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 1000 கீ.மீ. பிரச்சார நடைபயணமும், கையெழுத்து இயக்கமும் துவங்கியது.இக்குழுவினர் இன்று தஞ்சை பெரியகோவிலில் துண்டு பிரசுரங்கள் வழங்கி கையெழுத்து பெற்றனர்.

குழுத்தலைவர் மதனகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில் 1லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று ஜீன் 1ந்தேதி கவர்னர் மாளிகையில் மனு அளிக்கப்படும்,

மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் கோவில்களில் கட்டண தரிசனம் என்ற பெயரில் கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு உடன் தடை செய்ய வேண்டும்.

ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்விவரை இலவசமாக வழங்க வேண்டும். மாணவர்களிடம் நல்லொழுக்கத்தை வளர்க்க நீதி போதனை வகுப்புகளை நடத்த வேண்டும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார கையெழுத்து பெற்று கவர்னரிடம் மனு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!