The Bhoomi Puja for Govt ITI in Naranamangalam in Perambalur

பெரம்பலூர்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவால் 15.9.2015 அன்று சட்டப்பேரவையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் புதிதாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தற்காலிக ஏற்பாடாக ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக (08.02.16) அன்று தொடங்கி வைத்தார்.

அதனடிப்படையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கான வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் விடுதிக்கான கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நாரணமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது.

ரூ.4.53 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள ஆலத்தூர் அரசுதொழிற்பயிற்சி நிலையம் மற்றும் விடுதி கட்டிடங்களுக்கான கட்டுமானப்பணிகள் தொழிற்பயிற்சி கட்டிடத்தின் தரைதளம் 1119 ச.மீ பரப்பளவிலும், முதல் தளம் 416 ச.மீ பரப்பளவிலும், உள்புற நடை பாதை மற்றும் சாய்வு தளம் 204 ச.மீ பரப்பளவிலும் என மொத்தம் 1,739 ச.மீ பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் விடுதி கட்டிடங்கள் தரைதளம் 312 ச.மீ பரப்பளவிலும், முதல் தளம் 283 ச.மீ பரப்பளவிலும், உள்புற நடை பாதை மற்றும் சாய்வு தளம் 43 ச.மீ பரப்பளவிலும் என மொத்தம் 638 ச.மீ பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர். தமிழ்ச்செல்வன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே கர்ணன், பொதுப்பணித்துறை பணியாளர்கள், ஆலத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் உதயசங்கர், பயிற்சி அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!