spy Drone fly away from the chariot : surveillance intensity at Pasumpon

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் போலீசாரின் ஆளில்லாத உளவு விமானம் முலம் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் குருபுஜை மற்றும் ஜெயந்தி விழா அக்.30ல் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு மத்திய மாநில அமைச்சர்கள், தமிழக முதல்வர் உட்பட முக்கிய வி.ஐ.பி.க்கள் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் லட்சகணக்கான பொது மக்களும் அஞ்சலி செலுத்த வருகை தருகின்றனர்.

சட்டம் ஒழங்கு பாதுகாக்க தமிழக காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) ொொொொ தலைமையில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர். இந்நிலையில் நேற்று கமுதி பசும்பொன் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி விஜயகுமார் தலைமையில் தென்மண்டல ஐஜி சைலேந்திரகுமார் முன்னிலையில் ராமநாதபுரம் டிஐஜி (பொறுப்பு) மதுரை துணை கமிஷனர் பிரதீப்குமார், ராமநாதபுரம் எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா ஆகியார் மேற்பார்வையில் ஆளி்ல்லாத உளவு விமானம் பசும்பொன் கிராமத்தில் சோதனை ஒட்டம் விடப்பட்டது. ஆளி்லலாத விமானம் பசும்பொன் கிராமம் மற்றும் கமுதி வரை சென்று படம் பிடித்து மீண்டும் பசும்பொன் கிராமத்திற்கு வந்து சேர்ந்ததது. இதன் முலம் சமுக விரோத செயல்களில் ஈடுபடுவோர் ஆளில்லாத விமானம் கண்காணி்ப்பு கேமரா முலம் வானிலிரு்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!