Self Help Groups Rs. Aim to provide 88 billion loan: Perambalur Collector V.Santha

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்களுக்கு நிதி உள்ளாக்கம், நிதியியல் கல்வி மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல் தொடர்பாக ஒரு நாள் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று ஆர்.சி.ஆர் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டாரம், வெங்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 31 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.84 கோடி வங்கி கடன் இணைப்பை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

நாட்டின் முன்னேற்றம் பெண்களின் முன்னேற்றத்தை சார்ந்தே உள்ளன. அதன் காரணமாகத்தான் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதனடிப்படையில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக விளங்கும் பெரம்பலூர் மாவட்டத்தை முன்னேற்றுவதற்கு பெண்கள் அனைவரும் சுயமாக தொழில் செய்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பெண்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் வங்கியாளர்கள் தங்களது முழு ஒத்துழைப் அளிக்க வேண்டும்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிட ரூ.88.00 கோடி வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கியாளர்கள் மேற்காணும் இலக்கினை எய்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் கடன் உதவி வழங்கி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வங்கிகள் முன்வரவேண்டும். மேலும் சிறந்த தொழில் முனைவோர் குழுக்களை கண்டறிந்து அவர்களுக்கு கடனுதவி வழங்கி ஊக்குவிக்க வேண்டும், என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயகத்தின் திட்ட இயக்குநர் தேவநாதன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் உமாமகேஸ்வரி, மண்டல இணைப்பதிவாளர் பொpயசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்தாசன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் நவீன்குமார், கிராம சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் அகல்யா, நிதி உள்ளாக்க ஆலோசகர் ராஜீ, மாநில அளவிலான நிதி உள்ளாக்க பயிற்றுநர் ராமதாஸ், மகளிர் திட்ட உதவித் திட்ட அலுவலர்கள் துர்காசெல்வி, சிவகுமார், முத்துப்பாண்டி, சரவணபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!