Road block for arresting the VCK executive near in Perambalur

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்த வி.சி.க வேப்பூர் ஒன்றிய நிர்வாகி பால்ராஜை காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பலால் கடந்த 23-ம் தேதி நல்லறிக்கை அரசு மதுபானக் கடை அருகே அரிவாளால் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றார்.

காயமடைந்த பால்ராஜ் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தாக்குதல் தொடர்பாக குன்னம் போலீசாரிடம் சம்மந்தப்பட்டவர்களின் பெயர் பயன்படுத்திய வாகன எண் கொடுத்தும் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை எனக் கூறி விசிக வினர், இன்று காலை புதுவேட்டக்குடி பேருந்து நிறுத்தத்தில் பால்ராஜ் உறவினர்கள் மற்றும் அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அரியலூர், பெரம்பலூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த மங்களமேடு டி.எஸ்.பி ஜாவஹர் லால், இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்ரமணியன், மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர்கள், ராஜீ, மனோஜ், நடராஜ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பால்ராஜை தாக்கியவர்களை உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

சுமார் 1 மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால், அரியலூர் – திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!