Republic Day Celebration in Namakkal; The Collector is respected with the national flag

நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றித்து ரூ. ஒருகோடியே 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தினவிழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் விழாவைக் கொண்டாடும் வகையில் வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டார்.

சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்களை வழங்கினார். மேலும் அரசுத் துறை அலுவலர்களுக்கும் அவர்களது பணியினை பாராட்டி நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னாளர் படைவீரர்கள் நலத்துறை,வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் மற்றும் மலைப்பயிர்கள் துறை,வருவாய்த்துறை,மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 172 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே42 லட்சத்து 96ஆயிரத்து 330 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

விழாவில் திருச்செங்கோடு எம்டிவி மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதுச்சத்திரம் ஆர்ஜிஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மோகனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னமுதலைப்பட்டி சுரபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாமக்கல் பாரதி பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 783 மாணவ மணவிகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அருளரசு, டிஆர்ஓ பழனிசாமி, சப் கலெக்டர் கிராந்திகுமார்பதி, சிஇஓ உஷா உள்ளிட்ட திரளான அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!