Red carpet for officers; Students fluff: the plight of public school students exhibition!

பெரம்பலூரில் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 46 வது ஜவகர்லால் நேரு வருவாய் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் மற்றும் அறிவியல் கண்காட்சி தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த அரசியல் கட்சி சார்பில் சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆனால், கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்ட அரங்கம் தரை பூசப்படாத புழுதி மண் பறக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மாணவர்கள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி செயல்விளக்கம் கொடுத்து கொண்டிருந்தனர்.

அம்மாணவர்கள் முழுவதும் இருந்த அரங்கு பகுதியில் மக்கள் நடமாட்டத்தால் புழுதி கிளம்பியது. இதில் பெரும்பாலான மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு தும்மி கொண்டு இருந்தனர். ஆனால் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு நாற்காலிகள் விழாவில் போடப்பட்டிருந்தன.

பள்ளிக் கல்வித்துறையின் நிகழ்ச்சி ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே பார்த்தால் ஈறும் பேனும் என்பது போல் இருந்தது. அதிகாரிகள் விழாவை ஏற்பாடு செய்வதற்கு முன்பு மாணவர்களின் சுகாதாரத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.

மேலும், இது போன்ற புழுதியில் இருந்தால் மாணவர்களுக்கு சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் என்பதை உணர வேண்டும்.

இனி வரும் காலத்தில் புழுதி கிளம்பாத தரை தளத்தை தேர்வு செய்ய வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!