Ramanathapuram Valividu Murugan Temple Panguni Uttra festival started with Host of flag

ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோயில் 78வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடந்தது. பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் தொடர்ந்து பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறும் மார்ச் 30ம் தேதி பங்குனி உத்திர பெருவிழா நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஸ்ரீ வழிவிடு முருகன் கோயில் 78வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா இன்று காலை கணபதி புஜையுடன் தொடங்கியது. பின் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் வேதவிற்பன்னர்கள் புஜைகள் செய்து பங்குனி உத்திர பெருவிழா நிகழ்ச்சிக்கான கொடியேற்றத்தை பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பலரும் முருகன் கோயில் வளாகத்தில் சிறப்பு பூசாரிகளிடம் காப்புகட்டி கொண்டு விரதத்தை தொடங்கினர்.

10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் பொம்மலாட்டம், பாராயணம், பக்திசொற்பொழிவு, புச்சொரிதல், கிராமிய இசை, கரகாட்டம், பக்தி இசை, சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பெருவிழா மார்ச் 30ம் தேதி நடைபெறும்.

அன்றைய தினத்தில் காலை 8.30 மணிக்கு மேல் காலை 8.55 மணிக்குள் மேஷம் லக்கனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம் நொச்சிவயல் ஊரணிக்கரையில் உள்ள ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரர் கோயிலை அடைந்து காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ரிஷபம் லக்கனத்தில் பால்குடம், பால்காவடி, பறவைக்காவடி கட்டி புறப்பட்டு மீண்டும் வழிவிடு முருகன் கோயிலை வந்தடையும். பகல் 12.30 மணிக்கு மிதுனம் லக்கனத்தில் அபிஷேக ஆராதனைகள் வெகு விமர்சையாக நடைபெறும்.

பங்குனி திருவிழாவில் காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், பால்காவடி, பறவைக்காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகனுக்கு நேர்த்திகடன் செலுத்துவர். அன்றைய தினம் மாலை கோயில் முன்பாக புக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். நுாற்றுகணக்கான பக்தர்கள் புக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.

விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா கணேசன் செய்து வருகிறார். ராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் நடக்கும் இக்கோயில் திருவிழா மிகவும் முக்கியம் வாய்ந்த திருவிழா. ராமநாதபுரம் மட்டுமின்றி சுற்றி உள்ள பல்வேறு ஊர்களிலிருந்து லட்ச கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிபட்டு செல்வர்.

திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் டிஎஸ்பி நடராஜன் தலைமையில் நுாற்றுகணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். முக்கிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!