The Indian Oil Fuel Austerity Campaign Awareness Cycle Rally in Ramanathapuram


ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் ராமநாதபரம் மாவட்ட இண்டேன் எல்பிஜி வினியோகஸ்தர் சங்கம் சார்பில் எரிபொருள் சிக்கன பிரச்சார விழிப்புணர்வு சைக்கிள் நேற்று ஊர்வலம் நடந்தது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் எரிபொருள் சிக்கன பிரச்சார மாதமாக ஜன.15 முதல் பிப்.15 வரை கடைபிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இண்டேன் எல்பிஜி வினியோகஸ்தர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நுாற்றுகணக்கானோர் ராமநாதபுரம் அச்சுந்தன்வயல் புறவழிச்சாலையில் துவங்கி 4 கி.மீ. துாரம் புறவழிச்சாலையில் சென்று ராமநாதபுரம் பட்டணம்காத்தான் நேஷனல் அகாடமி பள்ளியில் பிரச்சார சைக்கிள் ஊர்வலம் நிறைவடைந்தது.

விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சார ஊர்வலத்தை ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிரசார பயணத்தில் மதுரை மண்டல இந்தியன் ஆயில் நிறுவன துணை பொது மேலாளர் மணிவண்ணன், மேலாளர் சரவணகுமார், பாலாஜி காஸ் உரிமையாளர் சிவகுமார், வாலியா காஸ் பங்குதாரர்கள் முத்துராமலிங்கம், ராஜாராம்பாண்டியன், சாந்தி (நயினார்கோயில்), ராஜூ (முதுகுளத்துார்), மாரிநாதன் (கடலாடி), காமில் (புதுமடம்), சுலைஹா (சக்கரக்கோட்டை), முன்னாள் கவுன்சிலர் காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து இண்டேன் எல்பிஜி நிறுவன ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கும் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. சைக்கிள் பிரச்சாரத்தில் பங்கேற்ற மாணவர்கள் உட்பட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

செய்தி: இ.சிவசங்கரன், ராமநாதபுரம்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!