Private sector job camp in Namakkal; Call the collector to participate

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தனியார்துறை நிறுவனங்களும் மற்றும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை 12ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நோரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

அரசுத் துறைகளுக்கு அவர்களது பதிவு மூப்பின்படி அரசு பாரிந்துரைக்கப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், கண்காணிப்பாளர், மேலாளர், கம்ப்யூட்டர் பயிற்சியாளர், கேசியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசோசியேட் சூப்பர்வைசர் ,நைட் வாட்ச்மேன் மற்றும் ஆசிரியர் போன்ற பணிகளுக்கு டிப்ளமோ, பட்டபடிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு பி.எட்., முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை 14ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இது தவிர இதர கல்வித்தகுதிகள் உடையோரும் தகுந்த பணியிடங்களுக்கு பாரிசிலிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!