Private school lock broken for stealing 1.20 lakhs near in Namakkal, Two persons arrested

நாமக்கல் அருகே தனியார் பள்ளியின் பூட்டை உடைத்து ரூ. 1. 20 லட்சம் திருடிய இருவர் கைது

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே தனியார் பள்ளியின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் திருடிய இருவரை பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திஅருகே உள்ள பிள்ளைக்களத்தூரில் தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளி நிர்வாகிகள் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி வழக்கம்போல் பள்ளியைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை பள்ளிக்கு வந்தபோது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தனியார் பள்ளியின் தலைவர் வடிவேல் (வயது 61) பரமத்தி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து பள்ளி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதே போன்று, கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி காமராஜர் மேல்நிலைப்பள்ளியின் அலுவலக பூட்டை உடைத்து ரூ.10,350/- திருடப்பட்டது. இது குறித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பரமத்தி போலீசார் பரமத்தி பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஈரோடு மாவட்டம், சித்தோடு ராயர்பாளையத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் செல்வராஜ் (வயது 24), சின்னுசாமி மகன் விஜி (வயது 23) என்பதும் பிள்ளைக்களத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ரொக்கம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்தைத் திருடியதும் தெரியவந்தது. அதன்பேரில் அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ.40 ஆயிரத்தை கைப்பற்றிய போலீசார், நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிடிப்பட்ட குற்றவாளிகளுக்கு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படையினரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!