Preliminary Training Camp for Regulatory Activities for Government Official in Namakkal

நாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த முன்னோடிப்பயிற்சி முகாமை கலெக்டர் துவக்கிவைத்தார்.

நாமக்கல் மாவட்ட தொழில்மைய அலுவலகத்தில் அரசு பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த முன்னோடிப்பயிற்சி மற்றும் அலுவலக நடைமுறைகள் குறித்த குறுகியகாலப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தொடங்கி வைத்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் வரும் 7ம் தேதி வரை முன்னோடி பயிற்சி மற்றும் குறுகிய காலப்பயிற்சி வகுப்புகள் 5 நாட்கள் நடத்தப்படவுள்ளது. முன்னோடிப் பயிற்சித்திட்ட பயிற்சி அனைத்துத் துறைகளைச் சார்ந்த மாவட்ட அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் மற்றும் தாசில்தார்கள் நிலை அலுவலர்களுக்கு அளிக்கப்படுகிறது.

முதல் இரண்டு நாட்கள் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளார்கள். குறுகியகாலப் பயிற்சித்திட்ட பயிற்சி நாளை (5ம் தேதி)முதல் வரும் 7ம் தேதி வரை 3 நாட்கள் அனைத்துத் துறைகளைச் சார்ந்த அலுவலங்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள்,துணை தாசில்தார்கள் மற்றும் தேர்வுநிலை உதவியாளர் நிலை அலுவலர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் அலுவலக நடைமுறை குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளார்கள். இந்த பயிற்சியானது அரசுப்பணியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியாகும்.

அரசு அலுவலர்கள் அலுவலக நிர்வாகத்தில் தங்களது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும், அலுவலக நடைமுறைகளை திறம்பட தெரிந்துகொள்ளவும் இப்பயிற்சி உதவும். இப்பயிற்சியினை அனைத்து அலுவலர்களும் நன்முறையில் பயன்படுத்தி தங்களது அலுவலகத்தை மேலும் திறமையாக நடத்திட வேண்டும். இப்பயிற்சியில் தாங்கள் கற்றுக்கொண்டவற்றை உங்களுடன் பணிபுரியும் பணியாளர்களுடன் பகிர்ந்து அவர்களையும் நல்ல திறமையான ஆளுமை பெற்றவர்களாக்கி மாவட்ட நிர்வாகத்தினை மேம்படுத்த வேண்டும் என பேசினார். இதில் ஆய்வுக்குழு அலுவலர் துரைராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!