.Pongal Gift was not given the People returned to their homes with disappointment

பெரம்பலூர் அருகே ரேஷன் கடைகளில் தமிழக அரசு இன்று அறிவித்தபடி பொங்கல் பரிசு வழங்காததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பெரம்பலூர் மாவட்ட்த்தின் பல பகுதியில் அத்தியூர், ஒகளுர், திருமாந்துறை, வதிஷ்டபுரம், பெண்ணக்கோணம், எறையூர், வாலிகண்டபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் முலம் சுமார் 30க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் பொங்கல் பரிசாக அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு மற்றும் ருபாய் 1000 ரொக்கம் தரப்படும் இன்று வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இதை நம்பி இப்பகுதி மக்கள் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் காலை 12 மணி வரை காத்திருந்தனர். இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் கேட்டனர். அப்போது அவர்கள் கரும்பு, முந்திரி, திராட்சை மற்றும் ரொக்க பணம் இதுவரை எங்களுக்கு வரவில்லை வந்தவுடன் தரப்படும் என கூறினார். இதை தொடர்ந்து பொங்கல் பரிசு வாங்க ஆவலுடன் வந்து பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!