Pongal ceremony sea waters adventure game on the shore of Ramanathapuram Aryaman competition: Collector Natarajan call

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அரியமான் கடற்கரையில் பொங்கல் திருநாளையொட்டி காணுப்பொங்கல் நாளான ஜன.16ல் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடல்நீர் சாகச விளையாட்டு போட்டிகள், சுற்றுலா கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது, என, கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

பொது மக்கள், சுற்றுலா பயணிகள் குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அரியமான் கடற்கரையில் கடல்நீர் சாகச விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதில் நீச்சல்போட்டி, கயாக், வாட்டர் பீடில், பீச் வாலிபால், பீச் கபடி போன்ற விளையாட்டு போட்டிகளும் சுற்றுலா துறை சார்பில் பரதநாட்டியம், சிலம்பம், கரகாட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம், சாட்டைகுச்சி, மாடு, மான், மயில் போன்ற வேடமிட்டு நடனமாடதல் தமிழர் பண்பாடுகளை பறைசாற்றம் வகையில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

கடல்சாகச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்த பயிற்சி பெற்ற வீளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள். பீச் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார்.

சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக ராமநாதபுரத்திலிருந்து அரியமான் கடற்கரை செல்வதற்கு தேவையான பஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள் காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கடல்நீர் சாகச விைளயாட்டு போட்டிகள் நடைபெறும்
இவ்வாறு கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. பேபி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, சுற்றுலாதுறை அலுவலர் மருதுபாண்டி உட்பட பலர் உடன் இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!