Police arrested in the Mechanic murder case accused : the dispute has been taking on bail! ||
மெக்கானிக்கை கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

பெரம்பலூர் அருகே உள்ள வயல்வெளிப் பகுதியில் நேற்று பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 39) மெக்கானிக் ஒருவர் பீர்பாட்டிலில் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கொலை செய்தது யார் என மருத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

முதற் கட்ட விசாரணையில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு பெரம்பலூர் விஜயகோபாலபுரத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாவும், கொலை முயற்சி, குண்டாஸ் போன்ற வழக்குகள் மெக்கானிக் ராஜா இருப்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இவரது கொலைக்கான காரணத்தை கண்டறிய போலீசார் நடத்திய விசாரணையில் மெக்கானிக் ராஜாவும், எறைய சமுத்திரத்தை சேர்ந்த ரெங்கநாதனும் நண்பர்கள், இருவரும், மருவத்தூர் பகுதியில் கொலை முயற்சி செய்த சம்பவத்தில் சிறைக்கு சென்றுள்ளனர். அப்போது இருவர் மீதும் குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது. இதில் ரெங்கநாதன் சில மாதங்களுக்கு முன்பே சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

ராஜா ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு பின்னர் இரு நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். சிறையில் இருந்து வெளிவந்த மெக்கானிக் ராஜா, ரெங்கநாதன் இருவரும் அய்யலூர் – கல்பாடி சாலையில் மது அருந்த சென்றுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ரெங்கநாதன், பீர்பாட்டிலால் தாக்கி உள்ளார். இதில் ராஜா மயங்கி விழுந்துள்ளார். பின்னர், மின்சாரத்தை சோதிக்கும் டெஸ்டரை கொண்டு ராஜாவின் கழுத்தில் ரெங்கநாதன் சகட்டு மேனிக்கு குத்தி உள்ளார்.

இதில், ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது விசாரனையில் தெரிய வந்தது. ரெங்கநாதனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!