Plan, founded on the well-being of everyone in the choice of Veppur Union: Interview with Minister Vijayapaskar

பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்து பேசியதாவது :

அனைவருக்கும் நல்வாழ்வு என்ற திட்டத்தில், தமிழகத்திலேயே முன்மாதிரியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 21 துணை சுகாதார நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு கிராம சுகாதார நிலையத்திற்கு இரண்டு செவிலியர்கள் நியமனம் செய்து, இதன் அடிப்படையில், இதே போன்று விராலிமலை (புதுக்கோட்டை), சூளகிரி (கிருஷ்ணகிரி) தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தற்போது தமிழகம் முழுவதும் 985 புதிய கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம் செய்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் 1800 மருத்துவர்களும், விரைவில் 450 கிராம செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இது போன்று ஒரு மருத்துவமனை வருவது என்பது சாதாரன விசயமல்ல! ஒரு மருத்துவமனைக்கு 2.5 கோடி ரூபாய் செலவாகும். மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 14 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவர் தானமாக வழங்கியுள்ள 40 சென்ட் நிலத்தில் புதியதாக கட்டிடம் கட்டுவதற்கு 70 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவ உபகரனங்கள் வழங்கிட சுகாதாரத்துறை தயாராக உள்ளது. இதுபோன்ற கிராமப்புறங்களுக்கு, மருத்துவமனை மிகவும் அவசியம். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் அர்பணிப்பு உணர்வோடு உங்களுக்கு சேவை வழங்குவார்கள்.

நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதல்ல, பொது மக்களும் தங்களின் உடல் நலன் குறித்து அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நோயின் தன்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்று அதனை தடுக்க முடியும்.

தற்போதுள்ள சூழலில் காலை முதல் மாலை வரை அனைவரும் ஓய்வு இல்லாமல் பணியில் கவனம் இருந்தாலும், அம்மா ஆரோக்கிய திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் 16 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் 1800 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிக சிறப்பாக மருத்துவ சேவையை வழங்கி செயல்பட்டு வருகிறது. இரண்டு கைஇல்லாத ஒருவருக்கு இறந்து போனவரின் கையை வெட்டி எடுத்து பொருத்தி அவர் தற்போது பேஸ்கட் பால் விளையாடி கொண்டிருக்கிறார். இதுபோன்ற மிக சிறப்பான சேவையை சத்தமில்லாமல் வழங்கி வருகிறது.

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் பெண்களுக்கு தாய் மாமன் சீர் கொண்டு வருகிறாரே இல்லையோ அம்மா குழந்தைகள் நலபரிசுத்திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு 16 பொருட்களை வழங்கி வருகிறது. இத்திட்டம் சிறப்பான திட்டம் என்பதால் தமிழகத்தை பார்த்து இதனை இந்தியாவில் 6 மாநிலங்கள் செயல்படுத்தி வருகிறது.

அடுத்து கர்ப்பிணி தாய் மார்களுக்கு பேரிச்சை பழம், ஹார்லிக்ஸ், பிஸ்கட், டானிக் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தாய், சேய் இறப்பு சதவீதத்தை குறைத்துள்ளோம். இதறணுகு காரணம் மருத்துவத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தான். என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் தொகுதி எம்பி.,சந்திரகாசி, எம்.எல்.ஏக்கள்., குன்னம்.ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் இளம்பை.தமிழ்செல்வன் மற்றும் பொது மக்கள், மருத்துவ துறை பணியாளர்கள், வருவாய் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!