Photo Exhibition of the Government of Tamil Nadu at Erumapatti Bus Stand near Namakkal

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பஸ்ஸ்டாண்டில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டது.

இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், கலந்து கொண்ட முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இப்புகைப்படக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பஸ்ஸ்டாண்டிற்கு வருகை தந்த பயணிகள் நேரில் பார்வையிட்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!