Perambalur Collector’s time delay, thousands of students, Women and offcial Wating with pain!


பெரம்பலூர் கலெக்டர் வருகைக்காக காத்திருக்கும் அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோரை படத்தில் காணலாம்

பெரம்பலூரில் இன்று 30வது சாலை பயன்படுத்துவோர் பாதுகாப்பு விழா பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வே.சாந்தா கொடியசைத்து தொடங்கி வைப்பதாக அறிவிக்கபட்டு, இன்று காலை 10 மணிக்கு பேரணி பாலக்கரையில் தொடங்கப்படுவதற்காக காலை சுமார் 9 மணியளவில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாலக்கரையில் ஆயிக்கணக்கானோர் காத்திருந்தனர். இதே மகளிர் திட்டத்தின் சார்பாக தேசிய வாழ்வாதார இயக்கத்தின் சார்பிலும் அதே பகுதியிலும் பேரணி நடக்க இருந்தது. இதற்கும் ஏராளமான பெண்கள் காத்திருந்தனர். இந்த இரு நிகழ்ச்சியை கலெக்டர் வே.சாந்தா கொடியசைத்து தொடங்கி வைப்பதற்காக ஆயிரணக்காண மாணவர்கள், பெண்கள், மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிடட காவல் துறையினர், தமிழ்நாடு போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை அதிகாரிகள், கல்வித்துறையை அதிகாரிகள், ஆசிரியர்கள், தனியார் வாகன விற்பனை நிலையங்களை சேர்ந்த ஏராளமானோர் காத்து கிடத்தனர்.

10 மணிக்கு வரவேண்டி மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா சாகவாசமாக சுமார் 25 நிமிடம் காலதாமதமாக வந்தார். இதனால், பேரணிக்கு காத்திருந்தவர்களிடம் உற்சாகம் குறைந்து சலிப்பு ஏற்பட்டதுடன் கால் கடுக்க பதாகைகளை வைத்து நின்றதால் களைத்து போயினர். ஓர் உயர் அதிகாரி நிச்சயிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு காலதாமதம் வருவது உயர்பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல என்பதுடன் தனக்கு கீழே வேலை பார்ப்பவர்களை எப்படி தட்டி கேட்க முடியும்!


பெரம்பலூரில் இன்று நடந்த 30வது சாலை பயன்படுத்துவோர் பாதுகாப்பு விழா பேரணியை கலெக்டர் வே.சாந்தா தொடங்கி வைத்த போது எடுத்தப்படம். அருகில் எஸ்.பி திசாமித்தல் , எம்.எல்.ஏக்கள் ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்), ஆர்.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்),  வட்டார போக்குவரத்து அலுவலர்கள் செல்வராஜ், பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

பின்னர், பேரணியை கலெக்டர் வே.சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் திசாமித்தல், எம்.எல்ஏக்கள் ஆர்.டி.ராமசந்திரன் (குன்னம்), ஆர்.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செல்வராஜ், பெரியசாமி, மாவட்ட கல்வி அதிகாரி (பொ) அம்பிபாபதி, வள்ளலார் மோட்டார்ஸ் அரவிந்தன், காவல் ஆய்வாளர்கள் கண்ணன் (பெரம்பலூர்), ராஜ்குமார் (பாடாலூர்) உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பாலக்கரையில் இருந்து புறப்பட்ட பேரணி வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம் சென்ற மோட்டார் சைக்கிள் பேரணி துறையூர் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், நடந்து சென்றவர்கள் பேரணி ரோவர் பள்ளி வளாகத்தையும் சென்றடைந்தது. பின்னர் அங்கு அனைவரும் கலைந்து சென்றனர். பேரணியில் தலைக்கவசம், மற்றும் சாலைவிதிகள், பாதுபாப்பு குறித்த பதாகைகள் ஏந்தியவாறும், முழக்கமிட்டடும் சென்றனர்.

முன்னதாக பாலக்கரை ரவுண்டான அருகே தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தனியார் வாகன விற்பனை நிலையங்கள் வழங்கிய தலைக்கவசங்களை மாவட்ட கண்காணிப்பாளர் திசாமித்தல், எம்.எல்ஏக்கள் ஆர்.டி.ராமசந்திரன் (குன்னம்), ஆர்.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆகியோர் வழங்கினர். மேலும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுங்களும் அவர்களுக்கு அங்கு வினியோகிக்கப்ட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!