Perambalur Brahmapureeswarar Temple Masi Magam Festival; Start with the flag of the day!

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசி மகத்தேரோட்ட திருவிழா வரும் 19ம்தேதி நடைபெறுகிறது.

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசி மகத்தேரோட்ட விழாவையொட்டி இன்று 11ம்தேதி காலை கொடியேற்றுத்துடன் விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து வரும் 18ம்தேதி வரை தினமும் ஹம்சவாகனம், சிம்மவாகனம், சேஷவாகனம், சூரியபிரபை/ சந்திரபிரபை வாசனம், யானை வாகனம் போன்ற வாகனங்கள் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

தொடர்ந்து 17ம்தேதி திருக்கல்யாண உற்சவமும், இரவு புஷ்பக விமானத்திலும், 18ம்தேதி கைலாச வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 19ம்தேதி 10 மணியளவில் நடைபெறுகிறது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலை நிற்கும். 20ம்தேதி கொடியிறக்கம் நடைபெறுகிறது. 23ம்தேதி மஞ்சள் நீருடன் விழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மணி, தக்கர் முருகையா மற்றும் முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், குமார், மகேஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!