சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட வந்த அமைச்சருக்கு சொந்த தொகுதி மக்கள் எதிர்ப்பு; திரும்பி சென்றார்!

schedule
2023-08-13 | 16:07h
update
2023-08-14 | 12:37h
person
www.kaalaimalar.com
domain
www.kaalaimalar.com

Opposition from the people of his own constituency to the minister who came to lay the foundation stone for the road construction work; He went back!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவும், போக்குவரத்துறை அமைச்சரான சிவசங்கருக்கு இன்று குன்னம் கிராமத்தில் பொதுமக்கள் எதிர்ப்:பு தெரிவித்ததால், அதிகாரிகளுடன் திரும்பி சென்றார்.

போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் குன்னம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 1 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் ஆசிரியர்களுக்கான கழிவறையும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் சைக்கிள் நிறுத்தும் கொட்டகை அமைக்கும் பணியையும், காலனி தெருவில் ரூ.16.04 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், காலனி வடக்குக் தெருவில் ரூ. 13.16 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து இன்று அடிக்கல் நாட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

இன்று வரிசையாக திட்டப் பணிகளை தொடங்கி வைத்து விட்டு கரம்பியம் கிராமத்தில் இருந்து குன்னத்திற்கு வந்தார். இதற்கு முன்னதாக கலெக்டர் கற்பகம் மற்றும் திட்ட அலுவலர் லலிதா உள்ளிட்ட அதிகாரிகள் வந்த போது, பொதுமக்கள் கலெக்டரிடம், அப்பகுதி மக்கள் தார்சாலையாக இருந்ததை சிமெண்ட் சாலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காரை விட்டு இறங்கிய அமைச்சர் சிவசங்கருக்கு உள்ளூர் கட்சி பிரமுகர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்து கொண்டிருந்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், பூமி பூஜை நடக்கும் இடத்தில் இருந்து அதிகாரிகள் வெளியே வந்தனர். அமைச்சரிடமும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததோடு, அதிகாரிகள் அறைக்குள் இருந்து கொண்டே திட்டம் தீட்டுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான களநிலவரம் என்ன என்பது தெரிவதில்லை. அதிகாரிகள், அரசியல்வாதிகள் கமிசனை மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள். பொதுமக்களுக்கு தற்போதைய தேவை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தனர். தங்களுக்கு தார் ரோடுதான் வேண்டும், சிமெண்ட் சாலை வேண்டாம் என்றும் இந்த வழியில் அதிக வாகனங்கள் செல்லும் என்றும் தெரிவித்தனர்.

கலெக்டர் கற்பகம் பொதுமக்களிடம் சமாதானம் செய்ததோடு, சிமெண்ட் சாலையை , பழையபடி தார்சாலையாக மாற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

பூமி பூஜை போட அமைச்சர், பக்கத்தில் உள்ள வெண்மணி கிராம நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

https://www.kaalaimalar.com/in-building-the-road-the-public-protested-to-the-authorities-themselves-not-to-me-minister-explanation/AMP

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kaalaimalar.com
Privacy & Terms of Use:
www.kaalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 03:51:04
Privacy-Data & cookie usage: