Occupational Fair Exhibition, seminar on behalf of the Employment Office

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் சேந்தமங்கலத்தில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

சேந்தமங்கலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிதொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. விழாவிற்கு நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார்பதி தலைமை வகித்து கண்காட்சியை துவக்கி வைத்து விழா சிறப்புரையாற்றினார். மேலும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிகள் வழங்கினார்.சேந்தமங்கலம் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார்.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார் தனது திட்ட விளக்கவுரையில் தெரிவித்ததாவது:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தாண்டு பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சியளிக்கப்பட்டது. இதன் மூலம் டி.என்.பி.எஸ்.சி க்கு 45 பேரும், போலீஸ் துறையில் 5 பேரும் அரசுப்பணி பெற்றுள்ளனர்.
வாரந்தோறும் நடத்தப்படும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் ஆயிரத்து 359 நபர்கள் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் மூலம் 958 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 35 ஆயிரத்து 900 உதவிதொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது என பேசினார்.

இதில் கல்லூரியின் கணிதத்துறைத் தலைவர் வெங்கடேசன் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல்ஹமீது போட்டித் தேர்வுகள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் குறித்தும் பேசினர்.

மேலும் நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் இராமகிருஷ்ணன் முப்படைகளில் வேலைவாய்ப்பு குறித்தும், நாமக்கல் மாவட்ட தொழில்மையம் துணை இயக்குநர் சிவக்குமார் சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைதல் குறித்தும் பேசினர்.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகம் நன்றி கூறினார். இவ்வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் 250 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!