New cultivation techniques in Vine Vegetables Free Training Camp: Namakkal Agricultural Science Center

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ளஅறிவிப்பு :

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை ( டிச.6 ) வியாழக் கிழமை காலை 9மணிக்கு கொடி காய் கறிகளில் புதிய சாகுபடித் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இப்பயிற்சி முகாமில் கொடி காய்கறிகளின் முக்கியத்துவம், ரகங்கள், சாகுபடிக்கு உகந்த மண் மற்றும் காலநிலை, பயிர் இடைவெளி, விதை நேர்த்தி, உரமேலாண்மை, நீர்ப்பாசனம், நீர் வழி உரமளித்தல், களைநிர்வாகம், நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறைகள், அதற்கான நிவர்த்தி செய்யும் முறைகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ நாளை காலை 9 மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2009 & 2015 - © 2018 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!