near In Perambalur villagers suffer from the mysterious disease

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் புது வேட்டக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெரு உள்ளது அத்தெருவில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 1500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 15 நாட்களாக திடீரென உடம்பில் காற்று பட்டால் அரிப்பு ஏற்பட்டு பின்னர் அந்த இடத்தில் தோய்த்தால் தடித்து வீங்கி விடுவதாகவும் பின்னர் அந்த இடத்தில் புண்ணாகி விடுகிறது. இந்த நோயினால் பொது மக்கள் இரவில் தூங்க முடியவில்லை என்றும், தங்களது உடலில் ஆடைகள் அணிய முடியவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்த நோய் பரவி வருகிறது ஊர் முழுவதும் பரவி வருகிறது. அருகில் உள்ள கிராமமான துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் காண்பித்தால் அந்த புண் குணமாகவில்லை எனவும் இது குறித்து டாக்டர் கூறியது : தற்சமயம் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து அதை மூட்டைகளில் திணித்து தங்களது வீட்டில் அடுக்கி வைத்துள்ளனர் அந்த மூட்டைகளில் இருந்து வர கூடிய சிறிய வண்டுகள் மனிதர்கள் மேல் பட்டால் உடனே அரிப்பு ஏற்பட்டு அந்த இடம் புண்ணாகிவிடும் என தெரிவித்த அவர், அதற்கான உரிய சிகிச்சை அளித்து வருவதாகவும், வீட்டில் உள்ள பருத்தி மூட்டைகளை வேறு இடங்களில் வைக்குமாறு கூறியுள்ளார்.

இதே போல் துங்கபுரம், புதூர், கொளப்பாடி, வெண்மணி, வயலூர், வயல பாடி, ஒலைப்பாடி, உட்பட பல்வேறு கிராமங்களில் இந்த நோய் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!