Near in Perambalur, Limestone quarries near the college students drowned in the pond 2 kills!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள லப்பைகுடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சையது அலி மகன் முகமது ரசின் ( வயது 18) சென்னை தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்

ஜாகிர் உசேன் மகன் அபுல் ஹசன் ( வயது 18) திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்

மற்றும் இவர்களது நண்பர்கள் ஜாகீர் உசேன் மகன் அக்தர் பர்வேஷ் (18) காதர் ( 18) இம்ரான் (18) இலியாஸ் மகன் அசரப் (18), உமர் (18) அமீர் பாசில் (18) உள்பட 9 பேரும் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கிழுமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கோவிந்த ராஜபட்டினம் கிராமத்தில் உள்ள சுண்ணாம்பு கல்குவாரியில் தேங்கி உள்ள நீரில் குளிக்க சென்றனர். குளிக்க சென்ற 9 பேருக்கும் நீச்சல் தெரியாது என்பது குறிப்பிடதக்கது

இந்நிலையில் குவாரியின் கீழே இறங்கி சுற்று சுவரை பிடித்து கொண்டு அனைவரும் குளித்தனர். இதில் முகமது ரசின், அபுல் ஹசன் இவரும் சுற்று சுவர் பாறை வழுக்கி நீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்தனர்.

இதை அறிந்த நண்பர்கள் குவாரியின் மேலே வந்து பொது மக்களை உதவிக்கு அழைத்தனர். அவர் தேடி பார்த்து கிடைக்கவில்லை. பின்னர் குன்னம் போலீசார் மற்றும் வேப்பூர் தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்

அதன் பேரின் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், சப் இன்ஸ்பெக்டர் செந்தமிழ் செல்வி, வேப்பூர் தீ அணைப்பு நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையிலான மீட்பு படை வீரர்கள் விரைந்து சென்று இறந்து போன முகமது ரசின் , அபுல் ஹசன் ஆகியோரது உட ல்களை தீவிரமாக தேடினர். இதில் அபுல் ஹசன் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Old Photo – mohamad-rashin

Old Photo – abul-hassan


மேலும், தீ அணைப்பு படை வீரர்கள் மற்றொருவரான முகமதுரசின் உடலை படகுகள் உதவியுடன் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!