National Unity Day Pledge: adopted Perambalur collectorate officers.

பெரம்பலூர் : அக்டோபர் 31ந் தேதி தேசிய ஒற்றுமை நாள் தினமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், “இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும், சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றினைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.

எனது நாட்டின் உள்பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன்” என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவா; அவா;கள் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் – தணிக்கை) பாலன், அலுவலக மேலாளர் மகாராஜன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!