National Farm Women’s Day Celebration on behalf of Namakkal Agricultural Science Center

நாமக்கல் வேளாண் அறிவிவியல் நிலையம் சார்பில் நேற்று நடைபெற்ற தேசிய பண்ணை மகளிர் தினவிழாவில் 7 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் தேசிய பண்ணை மகளிர் தின விழா நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் தத்தெடுக்கப்பட்ட வெண்ணந்தூர் அடுத்துள்ள மூலக்காடு கிராமத்தில்நடைபெற்றது. விழாவுக்கு நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் டாக்டர் அகிலா தலைமை வகித்து வேளாண்மையில் பண்ணை மகளிரின் பங்கு என்ற தலைப்பில் பேசியதாவது:

வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் முதன்மையாக ஈடுபட்டுவரும் பண்ணை மகளிரைப் போற்றவும், வேளாண் தொழிலை முக்கியத் தொழிலாக ஏற்று குடும்ப வாழ்வாதாரத்துக்கு நிலையான வருமானம் ஈட்டுவதில் வெற்றி கண்ட மகளிரைப் பாராட்டி ஊக்குவிக்கவும், பின்தங்கிய பண்ணை மகளிரைக் கண்டறிந்து அவர்களின் குடும்ப வருமானத்தைப் பெருக்க, சிறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நோக்கத்தில் பண்ணை மகளிர் தின விழா நடத்தப்படுகிறது என பேசினார்.

மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை திட்ட இயக்குநர் மாலதி பின்தங்கிய பண்ணை மகளிருக்கு, குடும்ப வருமானத்தைப் பெருக்க 4 பேருக்கு அரவை இயந்திரம், 2 பேருக்கு லேசர் தெளிப்பு நீர்ப்பாசன சாதனங்கள், ஒருவருக்கு கறவை மாடு ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் வேளாண் தொழிலை முதன்மையாக ஏற்று நிலையான வருமானம் ஈட்டுவதில் வெற்றி கண்ட பண்ணை மகளிர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் யூனியன் வங்கி சேலம் மண்டல உதவிப் பொது மேலாளர் புல்லாராவ், நாமக்கல் செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

விழாவை முன்னிட்டு வேளாண்மையில் இரட்டிப்பு வருமானம் பெருக்கும் தொழில் நுட்பக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பண்ணை மகளிரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் உதவிப் பேராசிரியர்கள் முருகன், பால்பாண்டி மற்றும் பண்ணை மகளிர் பங்கேற்றனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!