Namakkal, Senthamangalam near the front in cash upon issue: maternal hacked!

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கார் பட்டறை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இருவரை போலீசார் தேடி வருகின்றனர்

சேந்தமங்கலம் அடுத்துள்ள துத்திக்குளம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (49), இவரது மனைவி உமா மகேஸ்வரி (45). இவர்களுக்குச் சொந்தமான கார் பட்டறை நாமக்கல் அருகே உள்ள முதலைப் பட்டிபுதூரில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதேஸ்வரன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தபோது தனது தந்தை ரங்கராஜூக்கு பணம் அனுப்பி வந்தார். அந்தப் பணத்தை ரங்கராஜ் தனது மகள் சாந்தி (52) என்பவரின் பெயரில் துறையூர் பகுதியில் விவசாய நிலம் வாங்கிவைத்துள்ளார்.

இதுகுறித்து மாதேஸ்வரனுக்கு ஆரம்பத்தில் தெரியாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய மாதேஸ்வரன், தனது சகோதரி சாந்தியின் மகன்கள் சதீஷ் (25), ராதாகிருஷ்ணன் (35) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து லாரி தொழில் நடத்தி வந்தார்.

சமீபத்தில் லாரிகள் விற்ற பணத்தை தனது மருமகன்களுக்கு கொடுக்காமல் மாதேஸ்வரன் இருந்துள்ளார். இதில் சதீஷ், ராதாகிருஷ்ணன் இருவரும் மாதேஸ்வரனிடம் பணத்தைக் கேட்டு அடிக்கடிதொந்தரவு செய்து வந்துள்ளனர். அப்போது வெளிநாட்டில் தான் இருந்தபோது அனுப்பிய பணத்தை தனது தந்தை ரங்கராஜ், சகோதரி சாந்திக்கு விவசாய நிலம் வாங்கி வைத்ததால் தற்போது லாரி விற்ற பணத்தைத் தரமுடியாது என மறுத்துள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்படவத்தன்று இரவு வீட்டிலிருந்த மாதேஸ்வரன், நள்ளிரவில் கார் செட்டுக்கு வந்தபோது அங்கு மறைந்திருந்த சதீஷ், ராதாகிருஷ்ணன் இருவரும் அரிவாளால் மாதேஸ்வரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.

இதில் படுகாயமடைந்த அவரை அக்ககம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாதேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சதீஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!