Namakkal private sector employment for people with disabilities in the camp: 279 people Participation

நாமக்கல்லில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்த் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் 279 பேர் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவின் உத்தவின்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் வேலையில்லாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் வகையில் தனியார்த் துறை வேலை வாய்ப்பு முகாம் நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமில் 34 தனியார் நிறுவனங்கள் மற்றும் 279 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளை 8 ம் வகுப்பு வரை படித்தவர்கள், 8ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படித்தவர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்கள், கம்ப்யூட்டர் படிப்பு முடித்தவர்களை தனித்தனியாக பிரித்து அமர வைக்கப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகளிடம் தனியார் நிறுவனங்கள் நேர்காணல் நடத்தி தேவையான நபர்களை தேர்வு செய்தனர். இச்சிறப்பு முகாமில் 34 மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு பெற தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பணி நியமன உத்தரவுகள் வரும் 9ம் தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கவுள்ளார்.

மேலும் வேலை வாய்ப்பு பெறாத மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட மாவட்ட தொழில் மையம் மூலமாக கடன் வழங்க ஏதுவாக மாவட்ட தொழில் மையம் கலந்து கொண்டு 37 மாற்றுத்திறனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

பல்வேறு தொழில் பயிற்சிகள் வழங்குவதற்காக 29 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் மற்றும் அனைத்து நிறுவனம் மற்றும் அலுவலர்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அலுவர்கள் செய்திருந்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!