Namakkal Palapattirai Mariamman temple was thought to be in the presence of Hundial money officials

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்டியல் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படும்.

அந்த வகையில் இன்று ஆஞ்சநேயர் கோவில் உதவி ஆணையாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர் சுதாகர், ஆய்வாளர் அம்சா ஆகியோர் முன்னிலையில், கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் மூலம் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் செலுத்திய ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 559ம், 24 கிராம் தங்கமும், 44 கிராம் வெள்ளியும் இருந்ததாக கோவில் அதிகாரிகள் கூறினர்.

இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் உண்டியல் திறக்கப்பட்டது. அப்போது ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்து 707&ம், 17 கிராம் தங்கமும், 46 கிராம் வெள்ளியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!